ASSALAMU ALAIKKUM - Your Feedbacks and Wishes to bathuru86@yahoo.com

Tuesday, October 20, 2009

வேண்டாமே விபரிதம்....(முத்துப்பேட்டை சம்பவம்)

கடந்த திங்கள் மாலை சுமார் 6.00 மணியளவில் முத்துப்பேட்டையை சேர்ந்த இரு இளைஞர்கள் அதிரை- முத்துப்பேட்டை ரோட்டில் பல்சர் என்னும் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கி இருஇளைஞர்களும் இறந்தார்கள். (இன்னா லில்லா ...)

முத்துப்பேட்டை குண்டான்குளத்தெரு புரோஸ்கான்(28),ஆஸாத்நகர் மரைக்கான்(22).இருசக்கர வாகனத்தில் சென்றால் நமது இளைஞர்கள் அதிவேகமாக செல்கின்றார்கள் என்பது நிதர்சனமான உண்மை.அன்பான நண்பர்களே..எனது வாசகர்களே...நமது குடும்பத்தில் உள்ள சகோதரர்கள்,பிள்ளைகள்,நண்பர்கள் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தயவுசெய்து மெதுவாக செல்ல சொல்லி அன்புடன் எச்சரிக்கை செய்யுங்கள்.

ஏனென்றால் இன்றைய விபத்தில் ஒரு சகோதரரின் உடல் ஊறுப்புகள் தனித்தனியாக அங்கும் இங்குமாக சிதரிக்கிடந்ததை கண்டு கண்கலங்காதோர் யாருமில்லை.



No comments:

Post a Comment